டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரால் பரபரப்பு

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரால் பரபரப்பு
X

கட்டுப்பாட்டை இழந்த கார்

சேலத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு.
சேலம் பெரியகொல்லப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் இளம்பருதி (வயது 24). இவர், நேற்று மதியம் டீ குடிக்க மார்டன் தியேட்டர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். திடீரென கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி கார் நின்றது. காரின் முன்பகுதி சேதமானது. கார் ஓட்டிய இளம்பருதி மட்டும் காயம் அடைந்தார். அந்த இடத்தில் வேறு யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story