மணல் திருட்டை தடுக்கச் சென்ற கோட்டாட்சியரை கொல்ல முயன்ற மணல் லாரி ஓட்டுநர் கைது!
கைது
விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம், கிளிக்குடி அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற கோட்டாட்சியரை கொல்ல முயன்ற மணல் லாரி ஓட்டுநரை போலீஸார் இரவு கைது செய்தனர். கிளிக்குடி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக கடந்த கிடைத்த தகவலின்பேரில், அந்தப் பகுதியில் சோதனை நடத்த ஆர்டிஓ தெய்வநாயகி உள்ளிட்டோர் காரில் சென்றனர்.
வளையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ஆற்றுமணல் ஏற்றி வந்த ஒருலாரியை ஆர்டிஓ தடுக்க முயன்றார். அப்போது லாரியை நிறுத்தாத அதன் ஓட்டுநர் சங்கர், ஆர்டிஓ கார் மீது மோதினார். கார் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து காரை வேறுபக்கம் திருப்பியதில், காரின் ஒருபகுதியில் லாரி மோதி நின்றுவிட்டது.
அங்கு பொதுமக்கள் திரண்டதால், லாரி ஓட்டுநர் சங்கர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், அன்னவாசல் போலீஸார், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக ஓட்டுநர் அணி நிர்வாகி சுந்தர ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், லாரி ஓட்டுநர்சங்கர் இலுப்பூர் பகுதியில் இருப்பதாக தெரியவந்ததையடுத்து, அன்னவாசல் போலீஸார் இலுப்பூர்-விராலிமலை சாலை மேட்டுப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த சங்கரை அன்னவாசல் போலீஸார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை சிளைச் சிறையில் அவரை அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளரான அதிமுக ஓட்டுநர் அணி நிர்வாகி சுந்தரத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.