அரசியல் அமைப்பை காப்பாற்ற போகிற தேர்தல்: ஆ.ராசா

அரசியல் அமைப்பை காப்பாற்ற போகிற தேர்தல் என வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு ஊட்டியில் ஆ.ராசா‌ பேட்டியளித்தார்.

தி.மு.க., சார்பில் நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசா ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருணாவிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதலமைச்சர் மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்லி வருவதை போல, இந்த தேர்தல் அரசியல் அமைப்பை காப்பாற்ற போகிற தேர்தல். காப்பாற்ற வேண்டும் என்று நம்புகிறவர்கள் ஓரணியில் இருக்க வேண்டிய தேர்தல். ஊழலும் மதவாதமும் ஒன்றாக இணைந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் இருக்கிற பல்வேறு பன்பாடுகள், பல்வேறு இனங்கள், பல்வேறு கலாச்சார அடையாளங்கள் அத்தனையும் அழித்து, ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்ற மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகின்ற முதலமைச்சர் வழங்கியுள்ள அறிவுரைகளை ஏற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் முறையில் என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story