ஆட்சியர் தலைமையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனைக்கூட்டம்
ஆட்சியர் தலைமையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு அலுவலர்கள். பறக்கும் LIGOL குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.03.2024) நடைபெற்றது.பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள் 20.03.2024 (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27.03.2024 (புதன்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை 28.03.2024 (வியாழக்கிழமை) வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 30.03.2024 (சனிக்கிழமை) வாக்குப் பதிவு நான் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) வாக்குகளை எண்ணும் நாள் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள் 04.06.2024 (செவ்வாய்கிழமை) 06.06.2024 (வியாழக்கிழமை) தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் அறிவிப்பு வெளியான நாளான இன்று 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து. எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.