தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை தேர்தல் அலுவலர் ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை தேர்தல் அலுவலர் ஆய்வு
மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் 2024-யை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்களவைத் தேர்தல் வரும் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பிரசாரத்துக்காக, தொலைகாட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள்,

செய்திகள் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்று உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிட 24 மணி நேரமும் இயங்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு மூலமாக செய்தித்தாள்களில் வெளிவரும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார விளம்பரங்களை கண்காணித்து, அவற்றை வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்தும், தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய C-VIGIL என்ற தொலைபேசி செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags

Next Story