முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் மெர்சி ரம்யா
ஆட்சியர் அலுவலகம்
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 26ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக வழங்கலாம். மனு அளிக்க விரும்புவோர் கோரிக்கை மனுக் களை இரட்டைப்பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் இணைத்து வழங்க வேண்டும். அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு ஆஜராகி மனுக்களை பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Next Story