வெடி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை:அதிகாரிகள்
பட்டாசு ஆலையில் பணி முடித்து செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக வெடி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேலாமத்தூர் பகுதியில் தனியார் சரவணன் என்பவருக்கு சொந்தமான கருடா என்ற பட்டாசு ஆலை நாக்பூர் உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது 17 அறைகளுடன் செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில்,
இன்று மாலை பணி முடிந்து மணி மருந்து உள்ள அறையை சுத்தம் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆளையின் ஒரு அறை மட்டும் சேதமடைந்தது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story