கழிவுநீர் பிரச்சனை - தேர்தலை புறக்கணித்த குடும்பம்

கழிவுநீர் பிரச்சனை - தேர்தலை புறக்கணித்த குடும்பம்

ஜெகநாதன் 

திருப்பத்தூர் அருகே கழிவநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி ஒய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் குடும்பத்துடன் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சகாயம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் வயது 73 கல்வித்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சுமார் 28 வருட காலமாக இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அவதி உற்று வருகிறார். மேலும் பொது வழியை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அவதியுற்று வருவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் மனுவும் அளித்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக கருத்தில் கொண்டு தனக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இல்லாவிடில் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணித்து வீட்டின் மீது கருப்பு கொடி கட்டுவதாகவும் தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story