நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி குடும்பத்தினர் தர்ணா
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்தவர் அகமது பஷீர் இவருக்கு பூர்விக சொந்தமான நிலம் பார்த்திபனூர் பகுதியில் உள்ளது இதில் 21 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற உத்தரவின் படி 21 சென்ட் நிலம் இவருக்கே சொந்தம் என தீர்ப்பு வந்த பின்பு ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிலத்தை மீட்டுக் கொடுக்காததால் விரக்தி அடைந்த அகமது பஷீர் குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கையை வலியுறுத்தி பேசிய அகமது பஷீர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து குடும்பத்தினர் முதலுதவி சிகிச்சை கொடுத்தனர் அதன் பின்பு குடும்பத்தினர் கூறுகையில் தங்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஒரு ஏக்கர் 56 சென்ட் உள்ளது. இதில் சுமார் 21 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் கடந்த 9 ஆண்டு காலமாக அனைத்து அரசு துறைகள் மற்றும் நீதிமன்றத்தில் ஒரிஜினல் ஆவணங்கள் தாக்கல் செய்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு குடும்பத்தோடு செல்ல மாட்டோம் என அங்கேயே முகாமிட்டு இருந்தனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக ஒரு வார காலத்திற்குள் இதற்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.