விவசாயி மகன் நாமக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

விவசாயி மகன்  நாமக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

விவசாயி மகன் நாமக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

ராசிபுரம் அருகே விவசாயி மகன் 597 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தொட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், அன்னபூரணி தம்பதியின் மகன் கோகுல். ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் வித்யாமந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தார்.

தமிழ் 98, ஆங்கிலம் 99, இயற்பியல் 100 வேதியல் 100, உயிரியியல் 100, கணிதம் 100. இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறியதாவது, எனது அப்பா விவசாயம் தொழில் செய்து வருகிறார். குருசாமிபாளையம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன். எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஊக்கம் காரணமாக மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்.

படிப்பு நேரம் போக விடுமுறை நாட்களில் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தேன். பெங்களூர் ஐ சி எஸ் இ., ல் ஆராய்ச்சி மாணவர் ஆவது எனது எதிர்கால லட்சியம் என்றார். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவரை குருசாமிபாளையம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர், இயக்குனர், இருபால் - ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என அனைவரும் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story