ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் அவலம்

ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் அவலம்

திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது.

திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சூரியநகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய சுடுகாடு வேண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்தும்‌ நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் (70) என்கின்ற முதியவர் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததாலும் அங்குள்ள நந்தி ஆற்றங்கரை ஓரத்தில் புதைப்பதற்காக ஆற்றங்கரையில் முழங்கால் அளவுக்கு தண்ணீரில் மூழ்கியபடி உடலை கொண்டு சென்று ஆற்றங்கரை ஓரத்தில் அடக்கம் செய்தனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடு கேட்டும் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பொம்மராஜபுரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story