கெங்கையம்மன் கோவிலில் திருவிழா தொடக்கம்

கெங்கையம்மன் கோவிலில் திருவிழா தொடக்கம்

கெங்கையம்மன் கோவில் கொடியேற்றம்

வேலூர் மாவட்டம், கோபாலபுரம் பகுதியில் கெங்கையம்மன் சிரசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கெங்கை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த மே மாதம் 14ஆம் தேதி சிரசு திருவிழாவும், 13ஆம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.சிரசு திருவிழாவிற்காக வேலூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிரசு திருவிழாவை ஒட்டி நேற்று இரவு கெங்கையம்மன் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் சிரசு திருவிழா தொடங்கியது. மேலும் வெள்ளி காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags

Next Story