பாதுகாப்பு வசதி இல்லாமல் எருது விடும் திருவிழா நடத்திய விழா குழுவினர்!

பள்ளி சீருடையில் எருது விடும் திருவிழா மந்தையில் கை போட்ட பள்ளி மாணவர்கள்! கண்டுகொள்ளாத விழாகுழுவினர்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. அதனை தொடர்ந்து எருது விடும் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீராகள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரின் காளை சீறிப்பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தபோது கொனமந்தையின் அருகே இருந்த 30 அடி கிணற்றில் தவறி விழுந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்து தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று உயிருடன் மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளியை கட் அடித்து விட்டு பள்ளி சீருடையிலேயே மந்தையில் சீறி பாய்ந்து ஓடும் காளையை அடித்துக் கொண்டு இருந்தனர் மேலும் இதை விழாக்குழுவினர் கண்டுக்கொள்ள வில்லை மேலும் காளைகளை துன்புறுத்தும் வகையில் காளைகளின் ஆசனவாயில் கைகளை விட்டும் வாலில் கிளிப்புகள் போட்டும் அதேபோல் வயிற்றில் பகுதியில் கயிற்றால் இறுக்க கட்டியும் காளைகள் விடப்பட்டன மேலும் உரிய பாதுகாப்பு வசதி இல்லாமல் நடைப்பெறும் இடங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் எருது விடும் திருவிழாவிற்க்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து குறைந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை கடந்து காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முதல் பரிசாக 100000 ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசு 7777 ரூபாய் என மொத்தம் 46வரையிலான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியில் நாட்டறம்பள்ளி போலீசார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story