களம் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது - நாராயணன் திருப்பதி
விருதுநகர் பாஜக சட்டமன்ற அலுவலகத்தில் பாஜக ஊடகப் பிரிவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய நாராயணன் திருப்பதி திமுகவை பொறுத்த வரையில் தமிழின விரோத மற்றும் தமிழர்கள் விரோத மற்றும் தமிழக விரோத கட்சி எனவும் தமிழர்களை வஞ்சிக்க கூடிய கட்சி கடந்த மூன்று வருடங்களில் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்ற திட்டமிடுதலை தவிர வேறு எந்த திட்டமிடுதலும் திமுக அரசு செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் பேசியவர் கச்சத்தீவை மீட்க வேண்டும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்படுகிறது எனவும் பாஜக கேட்கின்ற ஒரே ஒரு கேள்வி கச்சத்தீவை ஏன் கொடுத்தீர்கள் கேள்வி எழுப்பினார்.
கச்சத்தீவு குறித்து யாருமே இதுவரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் கேட்கவில்லை என்றார். மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மக்களிடம் திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதன் பிறகு கச்சத்தீவு விவகாரத் தில் பாஜக தமிழக மீனவர்களுக்கு எப்படிப்பட்ட தீர்வை கொடுக்கும் என பாஜக அறிவிக்கும் என்றார். மேலும் பேசியவர் கச்சத்தீவு விவகாரத்தில் தீர்வு இருக்கிறது என்றார்.
கச்சத்தீவு குறித்து எங்களிடம் பேசுவதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கேட்பதற்கு தகுதி கிடையாது என்றார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை விட அதிகமாக தமிழ் பற்றி பேசியவர் பிரதமர் மோடி என்றார். கடந்த தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக அரசு எவ்வளவு செலவு செய்தது என்ற கணக்க விபரத்தை வெளியிட வேண்டும்.
மேலும் பேசியவர் தமிழுக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது என விமர்சனம் செய்தார். சமஸ்கிருதம் ஒரு அனாதை மொழி போல எனவும் ஒரு அனாதைக்கு உதவுவதில் தப்பு இல்லை என்றார். தமிழை வளர்ப்பதற்கு தமிழ்நாடு இருக்கிறது தமிழ்நாடு அரசு இருக்கிறது என்றார் மேலும் பேசியவர் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றார்.தமிழ்நாடு குறித்து தனியாக ஒரு தேர்தல் அறிக்கையும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. பாஜகவின் மத்திய தேர்தல் அறிக்கை வந்தவுடன் அதனை ஒட்டிய தமிழக தேர்தல் வரைக்கும் வெளியிடப்படும் என்றார். தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வருகை வருகை தர இருக்கிறார்கள் எனவும் களம் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது என்றார்.