சிவன்மலை அருகே 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
பாம்பு
காங்கேயத்தில் தனியார் மில்லில் சுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு - தீயணைப்பு துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவிப்பு.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பெருமாள் மலை அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் நேற்று சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் பயந்து அலறி அடித்து ஓடினர். அருகில் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் ஆக்ரோசமாக படமெடுத்து ஆடிய அந்த நாகப்பாம்பை பிடிக்க வேண்டும் என காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அந்த தனியார் நிறுவனத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் பத்திரமாக அதிநவீன பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் அந்த நாகப்பாம்பை மீட்டு பையில் அடைத்து பாதுகாப்பான காட்டு பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர்.
Next Story