தண்ணீரில் தத்தளித்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
தண்ணீரில் தத்தளித்த மானை உயிருடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அயன்ராஜாபட்டி பகுதியில் அதிக அளவில் மான்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மக்காச்சோளம் பயிர்களை உண்பதற்காக அங்கு வந்த மான் ஒன்று பாசன கிணறு இருப்பது தெரியாமல் தவறு கிணற்றில் உள்ளே எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது.
இரவு முழுவதும் கிணற்றை விட்டு வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்த அந்தமானை காலையில் தோட்டத்திற்கு வந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்த மான் குறித்து சாத்தூர் தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட்டது.
அங்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த கொண்டிருந்த மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Tags
Next Story