கழிவு நீர் கால்வாயில் கட்டு விரியன் - மீட்ட தீயணைப்பு துறையினர்
மீட்கப்பட்ட பாம்பு
விருதுகரில் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய 3.5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பெரியார் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள கழிவுநீர் கால்வாயில் கட்டுவிரியன் பாம்பு உள்ள சென்று கால்வாயில் சிக்கிக் கொண்ட பாம்பு அங்கும் இங்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் கால்வாயில் ஊர்ந்து வந்த 3 1/2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பத்திரமாக மீட்டனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story