சவுளுப்பட்டியில் மர்மநபர் வைத்த தீயால் பரபரப்பு

குமாரசாமி பேட்டையில் இருந்து சவுளுப்பட்டி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகாமையில் வானுயர்ந்து காணப்பட்ட கரும் புகையால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம் சட்டமன்ற தொகுதி, சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமி பேட்டையில் இருந்து சவுளுப்பட்டி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்திற்கு ஓரமாக உள்ள பகுதியில் பல நாட்களாக பொதுமக்கள் கொட்டி வரும் குப்பைகள் தேங்கி கழிவுகளாக இருந்து வந்தது இதனால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் யாரும் நடவடிக்கை எடுக்காததை நிலையில் இன்று மர்ம நபர் ஒருவர் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கரும் புகைகளால் சூழ்ந்து வானுயர்ந்து காணப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் வனப்பகுதிகளோ அல்லது குடியிருப்பு குழு அருகில் இல்லாததால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை சிறிது நேரத்தில் தீ கட்டுக்குள் வந்தது மேலும் இது போன்ற நடை பெறாமல் இருக்க கிராம நிர்வாகம் அவ்வப்போது குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story