குப்பைக்கு வைத்த தீ பரவி குடிசைகள் எரிந்து சேதம்

குப்பைக்கு வைத்த தீ பரவி குடிசைகள் எரிந்து சேதம்

தீ விபத்து

சாத்தான்குளம் அருகே குப்பைக்கு வைத்த தீ பரவி குடிசைகள் எரிந்து சேதமடைந்ததை அடுத்து போராட்டம் நடத்த திரண்ட அப்பகுதி மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட மோடி நகரில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. ஊராட்சி சாா்பில் அதே பகுதியில் சுவா் அமைத்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதி சுவா் உடைந்து கிடப்பதால் குப்பைக்கு வைக்கப்படும் தீ, குடிசைவீடுகளுக்கும் பரவி சேதம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

அதன்படி கடந்த வாரம் மீன் வியாபாரி திருமணி என்பவரது வீடு தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் நேற்று குப்பைக்கு வைத்த தீ அங்குள்ள ஆளில்லாத குடிசை வீட்டுக்கும் பரவியது. இதில் குடிசை வீடு தீக்கிரையானது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குப்பைக்கு வைக்கப்படும் தீ பரவுவதால் அதை கட்டுப்படுத்திட கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதையறிந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், குப்பை கிடங்கில் சுவரை உயா்த்தி கட்டவும், குடிநீா், மற்றும் மின் இணைப்பு ஏற்படுத்தி தருவதாகவும் உறுதிஅளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Tags

Next Story