சாலையில் கவிழ்ந்த கார் - உள்ளிருந்தவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்

சென்னையை சேர்ந்தவர் கௌஷிக் (33). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். தற்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆகவே தான் படித்த மருத்துவ கல்லூரி ஆசிரியர்களை பார்த்து ஆசி பெற கௌஷிக் மற்றும் அவரது தந்தை இராமச்சந்திரன் உடன் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து காரில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு புறப்பட்டனர். நேற்று காலையில் கவுஷ் ஓட்டிய சென்ற கார் குமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில், தக்கலை அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற ஒரு வாகனத்தில் மோதியது.
இதில் கவுசிக் ஓட்டிய கார் அப்பளம் போல் நொறங்கியது. இடுப்பாடுகளில் சிக்கிக் கொண்டு அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவரது தந்தை ராமச்சந்திரன் காயங்கள் இன்றி தப்பினார். அவர் கொடுத்த தகவலின் பேரில், தக்கலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கவுசிக்கை ஒரு மணி நேரத்தில் மீட்டனர். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
