பறவைகளுக்கு தண்ணீர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறையினர்.

பறவைகளுக்கு தண்ணீர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறையினர்.

விழிப்புணர்வு

சிவகங்கையில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறையினர்.
தமிழகத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் வெயில் மண்டையை உடைக்கும் அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இதனை போக்க மக்கள் வெள்ளரி, தர்பூசணி, நீர்மோர் என தேவையான வெயில் கால உணவுகளை எடுத்துக் கொள்வர். ஆனால் வாயில்லா பச்சிகளுக்கு வறண்ட நீர் திவளைகள் சோகத்தையே தருகிறது. இந்த காலகட்டத்தில் சிட்டுக்குருவி பறவைகள் போன்றவைகள் அழிந்து வரும் நிலையில் அவற்றை வெயிலிலிருந்தும் காப்பாற்றுவதற்கு அவ்வப்போது பலரும் பல வகையான முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை ஆட்சியராக பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் பிரபா அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் உள்ள மரங்களில் மண் சட்டியில் நீர் வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால் தாகம் எடுக்கும் பறவைகள் இந்த மண் குடுவையில் இருக்கக்கூடிய நீரை அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்கிறது.

Tags

Next Story