தாயை பிரிந்த குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் வனத்துறை!
குட்டி யானை
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டு தொடர்ந்து அந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர்.உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்ததால் குட்டி யானையை வைத்துக் கொண்டே சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சையை தொடர்ந்து அளிக்கபட்டது.
ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த யானையின் உடல்நலம் சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாயை பிரிந்த்து குட்டி யானை கூட்டத்துடன் சென்றது.தற்போது குப்பேபாளையம் பகுதியில் தனியார் பாக்குத்தோப்பில் இருந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.தாய் தாய் யானை அருகில் உள்ளதால் அதனுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடபட்டு வருகின்றனர்.