முதலையை மீட்டு அனைப்பகுதியில் விடுவித்த வனத்துறையினர்!

முதலையை மீட்டு அனைப்பகுதியில் விடுவித்த வனத்துறையினர்!

முதலை

விவசாய நிலத்தில் இருந்த ராட்சத முதலை மீட்டு வனத்துறையினர் அனைப்பகுதியில் விடுவித்தனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த லிங்காபுரம்,மொக்கை மேடு,உலியூர் ஆகிய கிராமங்கள் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ளன. பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வரும் நீர் அணையில் கலக்கும் இடத்தில் வனப்பகுதி அமைந்துள்ளதால் யானை புலி சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் தண்ணீர் அருந்த வருவது வழக்கம்.மேலும் மாயாற்றில் இருந்து வரும் நீரும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கலப்பதால் மாயாற்றில் உள்ள முதலைகள் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது காணப்படும்.இதனிடையே சிறுமுகை அருகே உள்ள காந்தையூர் பகுதியைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றபோது வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று தென்பட்டுள்ளது.அதனை உற்றுப் பார்க்கையில் அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சில மணி நேரத்திற்கு பிறகு முதலையை கயிறு கட்டி பிடித்தனர்.பின்னர் சுமார் 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவிக்கபட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story