கடையகுடியில் புதிய வீட்டை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
புதிய வீட்டை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடியில் அதிமுக கழக ஒன்றிய செயலாளர் அரிமளம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் எஸ் திலகர் மற்றும் கடையக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி கழகச் செயலாளர் இன்ப வள்ளி திலகர் தம்பதியரின் புதுமனையை தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான, டாக்டர். சி. விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி கழக செயலாளராக இருப்பவர் இன்பவள்ளித் திலகர் , இவரது கணவர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளராகவும் அரிமளம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் ஆகவும் திலகர் என்பவர் இருந்து வருகிறார்.
இவர்களது குடும்பம் தொன்று தொட்டு அதிமுகவில் இருந்து வருகின்றனர் மேலும் பல்வேறு பதவிகளையும் வைத்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் கடையக்குடியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டினை தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான, டாக்டர். சி. விஜயபாஸ்கர் தலைமையேற்று ரிப்பன் வெட்டி புதிய இல்லத்தினை திறந்து வைத்தார்.
பின்னர் குத்து விளக்கு ஏற்றினார், தொடர்ந்து தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி. கே. வைரமுத்து இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அனைத்து ஒன்றிய செயலாளர்கள், புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ .எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான், வடக்கு பகுதி நகரச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர், கடையக்குடி கிராமம் மற்றும் சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தை சேர்ந்த உற்றார் உறவினர்கள், அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கடந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கருக்கு மேளதாளங்கள், அதிர்வெட்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.