திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர்

திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 

மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக உழைத்த திமுக நிர்வாகிகளுக்காக தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,2024 தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் I-N-D-I-A கூட்டணி சார்பாக கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணிக்கு, போட்டியிட வாய்ப்பினையும் வழங்கி, அவரது வெற்றிக்காக தருமபுரியில் பிரம்மாண்டமாக பொது கூட்டம் நடத்தி கழக வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், திமுக வேட்பாளர் வெற்றிக்கு முயற்சி மேற்கொண்டு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தருமபுரி BSNL அலுவலகம் எதிரில், ஒடசல்பட்டிபட்டி, கூட்ரோடு, பாலக்கோடு, பென்னாகரம், ஆகிய பகுதிகளுக்கு வருகை தந்து பிரம்மாண்ட கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய இந்தியாவில் இளம் தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும்,

தருமபுரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பலமாக இருந்து கொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும்,வழங்கி எங்களை வழி நடத்திய மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், BLA 2, BLC, வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருக்கும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் தெரிவித்துக் கொண்டு, உங்கள் அனைவரின் இரவு பகல் பாரத கடுமையான உழைப்பால் தான் தமிழ்நாட்டில் அதிகப்படியான வாக்குப்பதிவை (81.48) தருமபுரி மாவட்டத்தில் நாம் அடைந்துள்ளோம். உழைப்பை அர்ப்பணித்துக் கொடுத்த அனைவருக்கும் சிறம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story