கோவில் புதிய திருமண மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!

கோவில் புதிய திருமண மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!

 கோவில் புதிய திருமண மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் உபகோவிலான விண்ணவரம் பெருமாள் சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.2¾ கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் உபகோவிலான விண்ணவரம் பெருமாள் சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.2¾ கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருமண மண்டபம் கட்டும் பணியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையொட்டி குலசேகரன்பட்டினம் விண்ணவரம் பெருமாள் சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி கல்வெட்டைத் திறந்து வைத்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழுத் தலைவர்கள் அருள்முருகன் (திருச்செந்தூர்) வே.கண்ணன் (குலசேகரன்பட்டினம்) மகேஷ்வரன் (செட்டியாபத்து) கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, திருச்செந்தூர் நகராட்சித் தலைவி சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், அறங்காவலர்கள், தி.மு.க. மாவட்டப் பிரதிநிதிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story