தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர் நாடகமாடியது அம்பலம் !
நாகர்கோவிலில் தொழிலாளியை அடித்து கொன்ற நண்பனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கன் கடையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் மாரிமுத்து (33). விருதுநகரை சேர்ந்த இவர் அந்தப் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். சக தொழிலாளர்கள் மீட்டு அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இருந்தார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குகள் செய்து விசாரணை நடத்தினர். முதலில் அவர் மது குடித்ததில் கீழே விழுந்ததாக சந்தேகம் ஏற்பட்டு, அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாரிமுத்து உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தாக்குதலில் தான் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாரிமுத்துடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் விசாரணை நடத்திய போது, இருநூறு ரூபாய் மாரிமுத்து கடன் வாங்கியதாகவும், நீண்ட நாட்கள் அதனை திருப்பிக் கொடுக்காததால கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரத்தில் மாரிமுத்துவை கீழே தள்ளியதில் அவர் காயமடைந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் சாலமோனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
Next Story