கஞ்சா வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சா வழக்கில் கைதான நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்
அடைக்கப்பட்டார்.
கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சா வழக்கில் கைதான நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜ்முகமது, கடந்த மாதம் கஞ்சா கடத்திய வழக்கில் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், ராஜ்முகமதுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். கலெக்டர் மெர்ஸி ரம்யா உத்தரவின்பேரில், ராஜ்முகமது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story