கூடாத நட்பினால் எனக்கு கிடைத்த பரிசு மரணம் - தற்கொலைக்கு முயன்ற நபர்

கூடாத நட்பினால் எனக்கு கிடைத்த பரிசு மரணம் - தற்கொலைக்கு முயன்ற நபர்

பைல் படம் 

திருப்பத்தூர் அருகே கூடாத நட்பினால் எனக்கு கிடைத்த பரிசு மரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் அருண் (35) பிக்கப் ஓட்டுநர் இவருக்கு லலிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன்களான வேலு மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிக்அப் வேலை ரூபாய் 40 ஆயிரத்துக்கு லீஸ்க்கு விட்டுள்ளார்.

அந்த பிக்கப் வேணை புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் வேலு மூன்று லட்ச ரூபாய்க்கு அடமனை வைத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அருண்குமார் தனது வேலை திரும்ப தரும்படி கேட்கும் பொழுது இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என நாட்களை அலைக்கழித்து வந்துள்ளார். இதன் காரணமாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆனால் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மணமுடைந்த அருண்குமார் இன்று கூடாத நட்பினால் எனக்கு கிடைத்த பரிசு மரணம் எனவும் மாமாவுக்கும் எனது மாமனார் குடும்பத்தாருக்கும் என்னால் உங்களுக்கு மன நிம்மதியை இழந்து நிறைய துன்பங்கள் கொடுத்துவிட்டேன். என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கும் முயன்று உள்ளார் இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story