துண்டு கழுத்தில் இறுகி சிறுமி பலி - போலீசார் விசாரணை
துண்டு கழுத்தில் இறுகி சிறுமி பலி - போலீசார் விசாரணை
திருச்சியில் ஊஞ்சல் கட்டிய துண்டு கழுத்தில் இருக்கி சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
திருச்சி பாலக்கரை மேலத்தெரு இருதயபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித் தொழிலாளி ஆன இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் வைஷாலி என்ற மகளும் உள்ளனர். வைஷாலி திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று பிரகாஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் வீட்டின் கீழ் பகுதியில் இருந்தனர். வைஷாலி தனது அண்ணன்களுடன் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவர்கள் பூஜை அறையில் உள்ள கொக்கியில் துண்டை ஊஞ்சல் போல் கட்டி விளையாடினர். அப்போது எதிர்பாராத விதமாக வைஷாலியின் கழுத்து தூண்டில் சிக்கியது. இதில் அவரது கழுத்தை துண்டு இறுக்கியது. இதனால் அவர் துளி துடித்து மயக்கம் அடைந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த பிரகாஷ் மட்டும் உறவினர்கள் வைஷாலியை மீட்டு திருச்சி அரசியல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வைஷாலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக் கேட்ட விஷாலியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story