பெண் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத பெண் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் அடுத்த நடுகொள்ளுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார் இவருக்கு வயது 30, இவரது மனைவி ஜெய்ஸ்ரீ. இவர்களுக்கு லித்திகா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து மரபணு கோளாறு நோய் காரணமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story