வெள்ள நிவாரணத்திற்கு உண்டியல் பணம் வழங்கிய சிறுமி -குவியும் பாராட்டு
நிவாரண தொகை வழங்கிய சிறுமி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியரிடம் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்த ரூ 2 ஆயிரம் பணத்தை 12 வயது சிறுமி நிவாரண தொகையாக வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்ததுடன் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து அடிப்படை தேவைகளுக்கே மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் கமலகண்ணன் ராதிகா தம்பதியரின் 12 வயது மகளான நர்மதா தான் இரண்டு ஆண்டுகளாக சிறிது, சிறிதாக சேர்த்து வைத்திருந்த சுமார் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து புயல் நிவாரணமாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவியை பாராட்டினார்.
Next Story