விபத்தை தவிர்க்க மேம்பாலத்தின் மீது மோதிய அரசு பேருந்து!

விபத்தை தவிர்க்க மேம்பாலத்தின் மீது மோதிய அரசு பேருந்து!

விபத்து

விபத்திற்குள்ளான அரசு பேருந்து-போலீசார் விசாரணை
கோவை:கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகம் அவிநாசியில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி வந்த நகர பேருந்து A11 60 பயணிகளுடன் கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை அருகே இன்று வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் போட்டதால் விபத்து தவிர்க்க வேண்டி அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சின்னசாமி(46) வலது புறமாக திரும்பிய போது நிலை தடுமாறு அவிநாசி - கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் பேருந்தின் ஓட்டுனருக்கு காலில் லேசான காயமும், பேருந்து நடத்துனருக்கு பாலசுப்பிரமணியத்திற்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதால் மயக்கம் அடைந்தார்.இதனையடுத்து கோவை அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதால் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story