மண் பானை,அடுப்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை
மண்பானையை தலையில் ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய மண்பாண்ட தொழிலாளர்கள்
கோவை:தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும், மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு ஆணை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த மனு சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் வழங்கப்பட்டது.இதுகுறித்து பேசிய ராஜகோபால், தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும் மண் அடுப்பையும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும் மழைக்கால நிவாரண நிதியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் இதன் மூலம் பழங்கால தொழில் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Next Story