நேரத்திற்கு துவங்காத குறைதீர் கூட்டம் - காத்திருந்த மக்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11மணி ஆன பின்பும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வராத அதிகாரிகளால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

தமிழக முழுவதும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி நடைபெறுவது வழக்கம் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்குவதற்காக திங்கள்கிழமை தோறும் காலை முதலே வருவது வழக்கம். இந்நிலையில் இன்று வாரத்தின் முதல் ஆளான திங்கட்கிழமை என்பதால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை முதலே பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு மனு கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் தங்கள் மனுக்களை பெற்று பரிசீலிக்க மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் காலை 11 மணி ஆகியும் யாரும் வராதால் பொதுமக்கள் கால் எடுக்க காத்திருந்தனர் .பத்து மணிக்கு துவங்க வேண்டிய குறைதீர்க்க கூட்டம் 11 மணி ஆகியும் அதிகாரிகள் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் அமரக்கூட போதிய இருக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்தும் அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது..

Tags

Next Story