பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர்
சிவகாசியில் புதியதாக சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார்.
சிவகாசி அருகே அரசு பள்ளியில் சேர்க்கும் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் மாணவ மாணவிகளுக்கு சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுக்கும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகின்றது.சிவகாசி அருகே மங்கலம் கிராமம் உள்ளது. இங்கு அரசுத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 70 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு சேர்க்கும் மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் தனது சொந்த செலவில் சைக்கிள் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்த ஆண்டு 1ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 9 மாணவ மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் மதிப்பில் புதிய சை்ககிள் வாங்கி கொடுத்துள்ளார்.இதேபோல் விடுப்பு எடுக்கமால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்களுக்கும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றார்.இவரின் ஊக்குவிப்பு முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இதேபோல் கடந்த ஆண்டு பள்ளியில் முதல் நான்கு இடங்களை பிடித்த 20 மாணவ, மாணவியருக்கு 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இதே போன்று சைக்கிள் வாங்கி கொடுத்தார்.கடந்த 2020ல் விடுப்பு எடுக்கமால் பள்ளிக்கு வந்த 25 மாணவ மாணவியரை விமானத்தில் இவர் சென்னை அழைத்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.