அதிகாரிகளை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
முற்றுகை போராட்டம்
ஒருநூறாம்வயல் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவர் குறித்து விசாரணைக்கு சென்ற அதிகாரிகளை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் வசித்து வருவர் குஞ்சுராமன் காணி மகன் மது (26) கூலி தொழிலாளி. குடிநீரை சேகரிப்பதற்காக சென்றபோது யானை தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆறு காணி வனச்சரக குழுவினர், பத்துகாணி போலீசார் சம்பவ இடம் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த நிலையில் இன்று அதிகாரிகள் அங்கு விசாரணைக்கு சென்ற போது தங்களது கிராமத்தில் முறையான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு உறுதி அளிக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மதுவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story