மசூதிக்கு சென்ற இந்துக்கள், உற்சாக வரவேற்பு அளித்த இஸ்லாமியர்கள்

ஊத்தங்கரை மசூதிக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்க சீர் வரிசைகளோடு சென்ற இந்துக்களை இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பளித்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கச்சேரி ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதே சாலையில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஊத்தங்கரை ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் அன்பின் பரிமாற்றத்திற்காகவும் தட்டு வரிசைகளோடு மரியாதைகள் கொண்டு செல்வது வழக்கம்.

இதில் ஆப்பிள் மாதுளை பேரிட்சை, திராட்சை ஆரஞ்சு வாழைப் பழங்கள் பிஸ்கெட்டுகள் சாக்லேட்டுகள் துணிகள் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தட்டுகளில் வைத்து மசூதிக்கு எடுத்துச் செல்வர்.இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கைங்கரியம் சுப்பு ஐயர், விஷ்ணு பிரியன் ஆர் சி சி சர்ச் பங்குத்தந்தை மரியதாஸ், வேலூர் நீதிபதி ராதாகிருஷ்ணன், பெரியவர் அரிமா டிஎஸ் மணி, சென்னை சுந்தர்,கவின் ஜுவல்லரி சிவா டெக்னீசியன் குமார் சுகுமார் பழனியப்பன் அதியமான் கணபதி ராமன் வீரமணி குருக்கள் ரமேஷ்பாபு வட்டார வளர்ச்சி அலுவலர் உதயசங்கர் மருத்துவர்கள் தேவராசன் பத்மநாபன் மதன் திரௌபதி அம்மன் திருக்கோவில் நிர்வாகி சிவானந்தம் தீபக் (எ) பார்த்தீபன் உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வாசவி திருக்கோவில் நிர்வாகிகள் ஆர் கே எஸ் மணி ஆர்வி குப்தா ஊத்தங்கரை மகளிர் காவல் ஆய்வாளர் கார்த்தியாயினி உள்ளிட்ட ஏராளமானோர் தட்டு வரிசைகளோடு ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து மசூதிக்கு எடுத்து சென்றனர்.

மசூதியின் நிர்வாகிகள் பசூல் உஷ்மா செயலாளர் சாகுல் ஹமீது பேரூராட்சி தலைவர் அமானுல்லா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மசூதிக்குள் வந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்பு ஐயர், நீதிபதி ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, டாக்டர் தேவராஜன், சுந்தர்,ஆகியோர் சிறப்புரையாற்றி அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் கூறினர். ஊத்தங்கரை ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் சார்பாகவும் ஆர் சி சி சர்ச் சார்பாகவும் ஊத்தங்கரை மசூதிக்கு வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. அன்பின் வெளிப்பாடாக மசூதியின் சார்பில் குளிர்பானங்கள் பழ வகைகள் கஞ்சி உள்ளிட்டவை பரிமாறியும் இனிப்பு பண்டங்களை வழங்கியும் அன்பை வெளிப்படுத்தினர். அன்பின் பரிமாற்றமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பலருக்கும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது..

Tags

Next Story