உடல் பருமன் குறைப்பு நிலையம் உரிமையாளர் வீட்டில் கொள்ளை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆண்டாள்புரம் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் அவரது மனைவி இந்துமதி மற்றும் இவர்களது மகள் ப, சந்தோஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே உடல் பருமன் குறைப்பு நிலையம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத 5 நபர்கள் இவர்கள் வீட்டின் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று அவர்களை கட்டி போட்டு கத்திமுனையில் அவர்கள் அணிந்து இருந்த நகை உள்ளிட்டு வீட்டில் இருந்த 50 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்களிடம் இருந்த செல்உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
வீட்டின் உரிமையாளர் முருகானந்தம் அருகில் உள்ள வீட்டிற்க்கு சென்று செல்போன் வாங்கி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தன் பேரில் அவர்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். அதன் பேரில் ADSP சோமசுந்தரம் மற்றும் இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆய்வாளர் பவுல்ஏசுதாஸ் ஆகியோர் தலைமையில் தடவியல் துறையினர் வந்து தடயம் சேகரித்து வருகின்றனர். மேலும் தெற்கு காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தப்பி ஒடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.