மனைவியின் கண் எதிரே பலியான கணவன்

மனைவியின் கண் எதிரே பலியான கணவன்
விபத்தில் பலி
சங்ககிரி அருகே 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மனைவியின் கண்ணெதிரே கணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள கட்சிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சங்ககிரி அடுத்து அன்னதானப்பட்டி வையாபுரி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாதேஷ் தனது மனைவியின் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மதேசின் மனைவி பலத்த காயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளர். சாலை விபத்தில் உயிரிழந்த பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சங்ககிரி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மனைவியின் கண் எதிரே கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .

Tags

Next Story