ஆட்சியர் அலுவலகம் அருகே மனைவியை வெட்டிய கணவன்!

ஆட்சியர் அலுவலகம் அருகே மனைவியை வெட்டிய கணவன்!

மனைவியை வெட்டிய கணவன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டு விட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மகளிர் குழுவை சேர்ந்த அமராவதி என்ற பெண்னை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் குணா தப்பி ஓட்டம்!
தூத்துக்குடி அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா இவரது மனைவி அமராவதி கணவன் குணா ஊதாரியாக சுற்றிதிரிந்த காரணத்தினால் அமராவதி மகளிர் குழுவில் இணைந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். மகளிர் குழுவில் அமராவதி இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்வதை குணா கண்டித்துள்ளார். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு மற்றும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மகளிர் திட்டம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நடைபெற்றுள்ளது. அமராவதி இந்த பேரணியில் இன்று கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அமராவதி பேரணியில் கலந்து கொண்டு விட்டு தனது மகளிர் குழு நண்பரான கல்பனா என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கோரம்பள்த்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோன் புரோட்டா கடையில் அமராவதி உடன் வந்த கல்பனா பரோட்டா வாங்குவதற்காக வண்டியை நிறுத்த சொல்லி உள்ளார். இதைத்தொடர்ந்து அமராவதி கடை முன்பு வண்டியை நிறுத்தி வண்டியில் இருக்கும் போது அவரது கணவர் குணா அப்போது அங்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு அமராவதி கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறியபடி அமராவதி அந்த இடத்திலேயே கீழே சரிந்துள்ளார் இதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அமராவதியை சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அமராவதிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் குணாவை புதுக்கோட்டை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டு விட்டு சென்ற மகளிர் குழுவை சேர்ந்த பெண் அமராவதிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story