குடும்ப பிரச்சினையால் வீட்டை கொளுத்திய கணவன் - தம்பதி பலி
மீட்கப்பட்ட சடலம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2வது வீதியில் வசிப்பவர் தங்கராஜ். இவரது மனைவி லதா. மூத்த மகன் நவீன்குமார் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 1 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். 2 வது மகன் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக மனைவி லதா மற்றும் மகன்கள் தந்தை தங்கராசை மதிப்பது கிடையாது என்றும், உணவு கூட வழங்குவது இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மன அழுத்ததில் இருந்த தங்கராஜ் வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளார். மளமள வென எரிந்த தீ வீடு முழுவதும் பரவியது இதில் தங்கராஜ் மற்றும் மனைவி லதா ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பலியான நிலையில் மகன் நவீன் குமார் தனது மனைவி செல்வி , குழந்தையை காப்பாற்றி வெளியே அனுப்பி விட்டு தாயை காப்பாற்ற சென்றார். இதில் அவருக்கு 80% சதவீத தீ காயம் ஏற்பட்டதுடன், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டுளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தெற்கு காவல் துறையினர் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்