மனைவியை கொல்ல முயன்ற கணவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா
அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 01.11.2023 அன்று தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை வீட்டின் முன்பு அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்து உள்ளார். இதனையடுத்து அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது கீழப்பழூவூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ள நிலையில், இவர் வெளியே வந்தால் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால் பாலகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா குற்றவாளியை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லபட்டார்.
Tags
Next Story