நாட்றம்பள்ளி அருகே மனைவியை அழைக்க சென்ற கணவனின் பைக் தீ வைப்பு
தீ வைத்து கொளுத்திய பைக்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதி சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துக்குமார் வயது (36) இவருக்கும் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் சசிகலா (30) என்ற பெண்ணுடன் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3ஆண் பிள்ளைகள் உள்ளன.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது அவருடைய தாய் வீட்டில் வசித்து வந்தாள் இந்த நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று முத்துக்குமார் மனைவி சசிகலாவை சேர்ந்து வாழ அழைத்து உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகறாரு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சசிகலா மற்றும் அவரது தாயாரான சின்ன பாப்பா ஆகிய இருவரும் சேர்ந்து முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளார். இதனால் இருசக்கர தகதகவென எரிந்து முற்றிலும் நாசமாகின. தன் மனைவியை அழைத்து வர சென்ற இடத்தில் மனைவியே தன்னுடைய கணவனின் இரு சக்கர வாகனத்தை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.