நெல்லையில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி மரணம்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் விபத்தில் காயமடைந்த விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த விவசாயி சுடலைமுத்து சம்பவத்தன்று முருகன்குறிச்சி பகுதியில் சென்ற பொழுது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.இதனை தொடர்ந்து அங்குள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (மே 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story