பன்னாட்டு தொழிலதிபர் லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்து வாக்குப்பதிவு

பன்னாட்டு தொழிலதிபர்  லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்து வாக்குப்பதிவு

வாக்களித்த தொழிலதிபர்

பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தனது வாக்கு பதவிற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார்.

பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தனது வாக்கு பதவிற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை பூர்விகமாகக் கொண்ட பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார். மலேசியா, சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா, துபாய், லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளில் தனது தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.

தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகிய எந்த தேர்தல் நடந்தாலும் தனது சொந்த கிராமமான பூலாம்பாடி வந்து வாக்களிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார்.

டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார். பூலாம்பாடி அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

Tags

Next Story