கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தை பார்வையிட்ட நீதிபதிகள்

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தை பார்வையிட்ட நீதிபதிகள்
நீதிபதிகள் ஆய்வு
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பார்வையிட்டனர்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தை பார்வையிட்ட உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நாளை நடைபெற உள்ளது. சென்ற வருடம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது மூன்று பேர்கள் பலியாகினர்.

மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பல்வேறு குற்றசம்பவங்கள் அதிகம் நடைபெற்றது. ஆகவே இவ்வாறு நடப்பதை தடுக்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் சுகாதாரம், குடிநீர், மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்குகள் சம்பந்தமாக தகுந்த உத்திரவுகளை பிறப்பிக்க கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடந்தை பார்வையிடுவது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முடிவு செய்தனர்.

அதன்படி மாலை மூன்று மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள். சுரேஷ்குமார், அருள்முருகன் கலெக்டர் சங்கீதா காவல் ஆணையர் லோகநாதன் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

Tags

Next Story