கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கேரளா அரசு பேருந்து மீண்டும் துவக்கம்
மீண்டும் துவங்கப்பட்ட பேருந்து
கேரள அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவனந்தபுரம் காயங்குளம் - திற்பரப்பு, காயங்குளம் - பேச்சிப்பாறை ஆகிய வழித்தடங்களில் இரண்டு பஸ்கள் தினமும் இயங்கி வந்தன. இதனால் குலசேகரம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்ததது தினமும் ஏராளமான பொதுமக்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள்,
பால்டெக்னிக், பொறியல் படிக்கும் மாணவர்கள் பயன் அடைந்து வந்தனர். கொரோனா காலத்தில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன இதனால் இங்கிருந்து கேரள செல்வதற்க்கு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று காயங்குளத்தில் இருந்து திற்பரப்புக்கு மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. காலையில் வந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துனருக்கு அந்த பகுதி மக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதேபோல் மீண்டும் நிறுத்தப்பட்ட காயங்குளம் -பேச்சிப்பாறை பஸ் போக்குவரத்தை துவங்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.