ஓம் வடிவில் காட்சி தந்த மழலை முருகன்கள்
தேனியில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் வேடம் அணிந்து ஓம் வடிவில் காட்சி தந்த பள்ளி மழலைக் குழந்தைகளின் செயல் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.
தேனியில் உள்ள தனியார் பள்ளியில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு முருகனை வழிபடும் விதமாக பள்ளியின் மழலைக் குழந்தைகள் முருகர் வேடம் அணிந்தும் முருகனுக்கு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தைபூசத்தை கொண்டாடினார். பள்ளி குழந்தை செல்வங்கள் மயில் வேடம் அணிந்து முன்னே செல்ல தேர் இழுத்தும், காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் பள்ளி வளாகத்தை சுற்றி வந்த குழந்தைகள் பள்ளியில் அமைந்துள்ள கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி அரோகரா அரோகரா என மழலை குழந்தையின் குரலில் கூறியது கவர்ந்தது பின்னர் ஒரே நேரத்தில் 108 பள்ளி குழந்தைகள் கையில் வேலுடன் முருகன் வேடத்தில் வருகை தந்து ஓம் வடிவத்தில் ஒன்றாக நின்று காட்சி தந்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. பின்னர் முருகர் வேடம் அணிந்த 108 பள்ளி மழலை குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
Next Story