நாகர்கோவில் வீட்டருகே ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த தொழிலாளி

நாகர்கோவில் வீட்டருகே ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த தொழிலாளி

கோப்பு படம் 

நாகர்கோவில் வீட்டருகே ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த தொழிலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை பகுதி சிலோன் காலனியை சேர்ந்தவர் செல்லம் (60). அந்த பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தால் பாதிக்கப்பட்வர் பின்னர் ஒர்க் ஷாப் நடத்த முடியாமல், தற்போது செக்யூரிட்டியாக வேலைக்கு சென்று வருகிறார்.

இவரது மனைவி பெயர் ராணி (56). பார்வதிபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் பணியாளராக உள்ளார். சம்பவத்தன்று காலை ராணி கோவிலுக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது செல்வம் வீட்டின் வெளியே உள்ள கழிவறை பகுதியில் பாறைகளின் அருகில் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை தூக்கி பார்த்த போது, தலை உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக்காயங்களுடன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார்.

உடனடி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோத்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி சென்று விட்டனர். பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவில் ஆசாரிப்பள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இரணியல் போலீசில் ராணி புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் செல்வம் அன்று மது போதையில் இருந்ததை பலர் பார்த்து உள்ளனர். ஆகவே போதையில் நிலை தடுமாறு கீழே விழுந்ததில் இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மை தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story